Published : 25 Jul 2020 08:27 PM
Last Updated : 25 Jul 2020 08:27 PM
சென்னையில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், 14 டிஎஸ்பிக்கள் ஏஎஸ்பிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள், 14 டிஎஸ்பிக்கள் பதவி உயர்வு குறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்த அவரது உத்தரவு:
1. சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக உள்ள மகேஷ்வரி மேற்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
2. சிபிசிஐடி டிஐஜி மல்லிகா சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு அளிக்கப்பட்ட டிஎஸ்பிக்கள் விபரம்:
1. பெண்களுக்கு எதிரான குற்றம் புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ஜரினா பேகம்
2.வணிகவரித்துறை பிரிவி டிஎஸ்பி ராஜேஷ்வரி
3.திண்டிவனம் சப் டிவிஷன் டிஎஸ்பி கனகேஸ்வரி
4.திருப்பூர் சமூகநலன் மற்றும் மனித உரிமை டிஎஸ்பி கலிவரதன்
5.மதுரை நகர வரதட்சணை தடுப்புப்பிரிவு உதவி ஆணையர் வெற்றிச்செல்வன்.
6.கரூர், குளித்தலை சப்.டிவிஷன் டிஎஸ்பி கும்மராஜா
7.தலைமை அலுவலக கட்டுப்பாட்டறை டிஎஸ்பி கே.ராஜசேகர்
8.அரியலூர் சமூகநலன் மற்றும் மனித உரிமை டிஎஸ்பி. பி.கண்ணன்
9.தேனாம்பேட்டை உதவி ஆணையர் பி.கோவிந்தராஜு.
10.கோவை நகர குற்றப்பிரிவு (கிழக்கு) உதவி ஆணையர் பாஸ்கரன்.
11.புளியந்தோப்பு உதவி ஆணையர் ஜெயசிங்.
12.சேலம் ஆத்தூர் சப்-டிவிஷன் டிஎஸ்பி ராஜு.
13.தமிழ்நாடு சிறப்பு காவல் 5 வது பட்டாலியன் உதவி கமாண்டண்ட் பி.ஏ.உதயகுமார்.
14. கன்னியாகுமரி, சமூகநலன் மற்றும் மனித உரிமை டிஎஸ்பி. சுப்பராஜு
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT