Published : 23 Jul 2020 08:04 AM
Last Updated : 23 Jul 2020 08:04 AM

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.394 கோடி சேர்ந்தது தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

கரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனம் ரூ.5 கோடி, தமிழ்நாடு மின்வாரியம் ரூ.2 கோடியே 53 லட்சத்து 70 ஆயிரத்து 748, நீதிபதி ஆர்.சுப்பையா ரூ.1 கோடியே 86 ஆயிரத்து 639, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ரூ.1 கோடியே 50 லட்சத்து 31 ஆயிரத்து 750, அக்வாசப் இன்ஜினீயரிங் ரூ.1 கோடியே 50 ஆயிரம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பணியாளர்கள் ரூ.90 லட்சத்து 29 ஆயிரத்து 763, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் ரூ.42 லட்சத்து 47 ஆயிரத்து 371 மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி ரூ.44 லட்சத்து 15 ஆயிரம் நிதி கொடுத்துள்ளது.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம், கோவை மாவட்ட நீதிமன்றம் ரூ.11 லட்சத்து 81 ஆயிரத்து 500, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் ரூ.11 லட்சத்து 96 ஆயிரத்து 380 உட்பட பல நிறுவனங்களிடம் இருந்து ஜூலை 21-ம் தேதி வரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை ரூ.394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ஆகும்.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் மற்றும் அவரது மகள் நிரஞ்சனா ஆகியோர் தங்கள் உண்டியலில் சேமித்த ரூ.80 ஆயிரத்தை வழங்கியுள்ளனர். சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி டி.லக் ஷா தான் சேமித்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதுதவிர, ஐடிசி நிறுவனம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 59 லட்சம் செலவில், தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x