Published : 22 Jul 2020 03:33 PM
Last Updated : 22 Jul 2020 03:33 PM
காரைக்காலில் திமுக மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று (ஜூலை 22) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காரைக்கால் திமுக அமைப்பாளரும், புதுச்சேரி முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும், நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கீதா ஆனந்தன் முன்னிலை வகித்தார்.
கரோனா பொதுமுடக்க சூழலில் வாகனங்கள் பெருமளவில் இயக்கப்படாத சூழலில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், ஓடாத வாகனங்களுக்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும், வாகனக் கடன் தவணைத் தொகைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், புதுச்சேரி அரசு பாரபட்சமின்றி வாகன ஓட்டுநர்கள் அனைவரையும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும், ஓட்டுநர்கள் அனைவருக்கும் பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், திமுக நிர்வாகிகள். மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT