Published : 22 Jul 2020 07:25 AM
Last Updated : 22 Jul 2020 07:25 AM
தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளில் முன்வரிசையில் நின்று போராடும் செவிலியர்கள், காவல் துறையினர், துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவும் வகையில், சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘வேல்ஸ் கட்டணம் இல்லா கல்வி’ திட்டத்தை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் அறிவித்துள்ளார்.
இந்த முன்னோடி திட்டத்தின்படி, அவர்களது பிள்ளைகள் இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்று இருந்தால், வேல்ஸ் பல்கலை.யின் 50-க்கும் மேற்பட்ட இளங்கலை பட்டப்படிப்பை முழுவதுமாக கட்டணமின்றி படிக்கலாம். மேற்கண்ட 3 துறைகளில் ஒரு துறைக்கு 100 பேர் என 300 மாணவ, மாணவிகளுக்கு, 2020-ம்ஆண்டின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கட்டணம் இல்லா கல்வி அளிக்கப்படும். கரோனா தடுப்பு பணியில், உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமைவழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9003461468, 9952018671, 8807307082, 9445507603, 9445484961, 9962014445 ஆகிய எண்களில் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். பல்கலை. ஊழியர்களை நேரில் அணுகியும் தெரிந்துகொள்ளலாம்.
இதுபோல களப் பணியாற்றும் செயல் வீரர்களுக்கு உதவிபுரிய அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் பல்கலைக்கழக வேந்தர்களும் முன்வர வேண்டும் என்று டாக்டர் ஐசரி கே.கணேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT