Published : 30 Sep 2015 02:31 PM
Last Updated : 30 Sep 2015 02:31 PM

கிடப்பில் இருக்கும் மதுரை சர்வதேச சரக்கு விமான சேவை: தென்மாவட்ட தொழில், வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் அபாயம்

மதுரை விமான நிலையத்தில் அறிவித்து 2 ஆண்டுகளாகியும் சர்வதேச சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்படாததால் தென் மாவட்டங்களுடைய தொழில், வர்த்தக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள் ளதாக தொழில் வர்த்தகர்கள் அதிருப்தி யடைந்துள்ளனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட் டங்களில் இருந்து மாதந்தோறும் 10 டன் ஜவுளி, ஆயத்த ஆடைகள், 3 டன் கைத்தறி, பின்னலாடைகள், 180 டன் காய்கறிகள், பழங்கள், 2 டன் மலர்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு ப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

மதுரை விமான நிலையத்தை சரக்கு விமான நிலையமாக 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலா கியும் தற்போதுவரை ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை கையாளும் பணி தொடங்கப்படவில்லை. அதனால், திருவனந்தபுரம், கொச்சி, திருச்சி, கோவை, கோழிக்கோடு மற்றும் சென்னை உள்ளிட்ட பிற விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு தென் மாவட்ட சரக்குகள் ஏற்றுமதியாவதால் அதிகளவில் பொருட்செலவும், கூடுதலான பயண நேரமும் ஏற்படு கிறது. குறிப்பிட்ட நேரங்களில் விமானங்களில் சரக்குகளை ஏற்ற முடியாதபோது, திருப்பி அனுப் பப்படும் பழங்கள், காய்கறிகள் அழுகி கெட்டுப்போய் வர்த்தகர்கள் பாதிக்கப் படுகி ன்றனர்.

தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன், முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேல் கூறியதாவது:

மதுரை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச சரக்கு போக்குவரத்தை உடனடியாக தொடக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையை தவிர மற்ற நாடுகளுடன் இந்தியா செய்துள்ள விமான நிலைய சேவை ஒப்பந்த ங்களில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்படாததால் இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலிருந்தும் மதுரைக்கு நேரடியாக அந்நாட்டு விமான நிறுவனங்கள் சேவையை தொடங்க முடியவில்லை. மதுரை மற்றும் இதர தென் மாவட்டங்களில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், வளை குடா நாடுகளுக்கும், அங்கிருந்து மதுரைக்கும் சுற்றுலாப் பயணிகள், தொழில், வர்த்தகத் துறையினர், பணியாளர்கள், அந்நாடுகளில் குடியிருக்கும் தமிழர்கள் அதிகளவில் தினசரி பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள், மதுரையில் இருந்து அந்த நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாததால் மற்ற நகர விமான நிலையங்கள் மூலம் பயணம் செல்வதால் தென் மாவட்ட விமானப் பயணிகளுக்கு கூடுதலான கட்டணமும், பயண நேரமும் ஆகிறது.

வெளிநாடுகளில் உள்ள பல விமான நிறுவனங்கள் மதுரை க்கு நேரடியாக விமானச் சேவையை தொடங்க விரும்பம் தெரிவித்துள்ளன. வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சேவை தொடங்கினால், பிரதமர் அறிவித்துள்ள ‘இந்தியாவில் தயாரிப்பு செய்யுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தென் தமிழகத்துக்கு ஏராளமான அந்நிய நேரடி தொழில் முதலீடுகள் வருவதற்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x