Published : 20 Jul 2020 07:36 AM
Last Updated : 20 Jul 2020 07:36 AM
இந்திய மருத்துவர் சங்கத்தின் இளம் மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் அபுல் ஹாசன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், தேசிய அளவில் சிகிச்சை பலனின்றி 2.50 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில், குறிப்பாக தேசிய அளவில் 1350 மருத்துவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இறந்த மருத்துவர்களில் சிலர் சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சினைகளால் பாதித்திருந்த போதும், சேவை நோக்குடன் கரோனா சிகிச்சையில் ஈடுபட்டு, அதன் காரணமாக நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இறந்த அனைத்து மருத்துவர்களும் நல்ல அனுபவமும், மிகுந்த திறமையான பணி செய்பவர்களாவர்.
அவர்கள் இழப்பைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்களுக்கு முழு கவச உடையை தரமானதாக வழங்க வேண்டும். அதிக நேரம் மருத்துவர்கள் பணியாற்றுவதைத் தவிர்க்கும் வகையில், கூடுதல் மருத்துவர்களைப் பயன்படுத்த வேண்டும். அதே போல இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நோய் தொற்றால் பாதித்துள் ளனர்.
அவர்களின் பாது காப்புக்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT