Published : 06 May 2014 03:31 PM
Last Updated : 06 May 2014 03:31 PM

விருதுநகர்: மினி லாரி மீது அரசு பேருந்து மோதி 21 பேர் காயம்

விருதுநகர் - மதுரை நான்கு வழிச்சாலையில் மினி லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 21 பேர் காயமடைந்தனர்.

டயர் பஞ்சர் காரணமாக, சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த மினி லாரி மீது அரசு பேருந்து மோதியதால் இந்த விபத்து நேர்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 11 பேர் பலத்த காயம் காரணமாக, மதுரை அரசு மருத்துவமனைக்குக் அனுப்பிவைக்கப்பட்டனர்.

காயமடைந்த பயணிகள் விவரம்: மானாமதுரை பெ.செல்வராஜ் (52), தஞ்சாவூர் த.சந்தோஷ் (46), மதுரை பா.முத்துகிருஷ்ணன் (52), வெ.ஜெயராணி (40), ஓசூர் பா.காயத்திரி (44), அவரது மகள் திவ்யா (16), கன்னியாகுமரி தே.ஜெபரீஸ் (31), பா.ஆஸ்திலின் பரிட்டோ (9), சாத்தூர் ப.முத்துராஜ் (32), பாளையம் தே.ஜேசு (45), நிலக்கோட்டை சு.மீனா (28), நாகர்கோயில் கோ.சுப்புராஜ் (46), சோழவந்தான் ம.முத்துசாமி (30), கல்லல் கிருஷ்ணன் (73), அவரது மனைவி சங்கரம்மாள் (60), ருக்மணி (44), கனகராஜ் (58), ரெஜினா (36), செண்பகம் (44), ராஜம்மாள் (14) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இவர்களில், பேருந்து ஓட்டுநர் முருகன், கல்லலைச் சேர்ந்த கிருஷ்ணன், அவரது மனைவி சங்கரம்மாள் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடினர். தீயணைப்பு வீரர்களும், அப்பகுதி பொதுமக்களும் சுமார் 1 மணி நேரம் போராடி இவர்கள் 3 பேரையும் மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x