Published : 20 Jul 2020 06:56 AM
Last Updated : 20 Jul 2020 06:56 AM
நுகர்வோர் தங்களது வீட்டு மின்கட்டண விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்வதற்கான வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.
வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விபரங்களை அறிந்துகொள்ள மின் கட்டண விபர இணையதளம் (TANGEDCO – Bill Status) அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளம் (TANGEDCO – Online Payment Portal) ஆகியவற்றின் மூலமாகவோ தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள் ளது.
மேலும், முந்தைய மாத மின்கட்டண தொகையையே கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர் பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதையும் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ள லாம்.
இதன்படி, www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் சென்று மின்கட்டண சேவைகள் என்ற பிரிவில் இத்தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT