Published : 19 Jul 2020 07:22 AM
Last Updated : 19 Jul 2020 07:22 AM
தற்போது அமலில் உள்ள இ-பாஸ் கட்டுப்பாடுகளால், சிலர் அதைப் பெற விண்ணப்பிக்காமல், இரவு 10 மணிக்குப் பிறகு காரில் புறப்பட்டு, அதிகாலைக்குள் சேர வேண்டிய இடத்துக்கு சென்று விடலாம் என்று திட்டமிட்டு அதிக வேகத்தில் பயணிக்கிறார்கள்.
இதுகுறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தன் முகநூல் பக்கத்தில் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
“தற்போதுள்ள இ-பாஸ் நிபந்தனைகளில் திருமணம், மருத்துவம், மரணம் மற்றும் லாக் டவுனில் ஊர் திரும்ப இயலாமல் சிக்கியவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதைத் தாண்டி வர்த்தக காரணங்கள், திருமணம் தாண்டிய சென்டிமென்ட்டலான விஷயங்கள் என ஒருவர் பயணிக்க பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன
நடைமுறைகளில் உள்ள இயல்பான சந்தேகங்களையும் பயங்களையும் போக்க இந்த இ-பாஸ் விஷயத்தை கொஞ்சம் எளிமைப்படுத்தலாமே! ஒரு பக்கம் கூடுதலான கெடுபிடிகள் இருக்க, இ-பாஸ் எதுவும் எடுக் காமல் குறுக்கு வழிகளில் போகிற வர்களும் இருக்கத்தான் செய்கிறார் கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இ-பாஸ் இல்லாமல் பயணிப் பவர்கள் குறித்து வாடகைக்கார் ஓட்டுநர்கள் சிலரிடம் கேட்டபோது, “இ-பாஸ் இல்லாமல் அவசரத் தேவைக்காக காவல் துறை உயர் அதிகாரிகளிடம் கடிதம் பெற்று வருவோரை தைரியமாக அழைத்துச் செல்கிறோம். சமயங் களில் அப்படி இல்லாதவர்களை யும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றிச் செல்கிறோம். வழியில் சோதனை செய்யும் காவல் துறை யினரிடம் காரணத்தை சொல்லி பயணிக்கிறோம். சில நேரங்களில் சில காவல் அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கிறார்கள். பல நேரங் களில் அனுமதி மறுக்கப்படுகிறது. பெரும்பாலும், இரவில் கெடுபிடி இருக்காது என்பதால் முன்னிரவில் புறப்பட்டு அதிகாலைக்குள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றடைகிறோம். அதேபோல மறுநாள் இரவு புறப்பட்டு அதிகாலைக்குள் வந்து விடுகிறோம். இ-பாஸ் இல்லாமல் பயணிப்பதால் ஒருவித பதற்ற உணர்வுடனே வாகனங்களை இரவு நேரங்களில் ஓட்டுகிறோம். இரவு நேரத்தில் பதற்றமும் வேகமும் விபத்துக்கு வழி வகுக்கும்” என்று தெரிவித்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து காரில் பயணித்தவர்களில் 6 பேர் திண்டிவனம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் வந்த வாகனத்தில், ‘இ-பாஸ் இல்லை’ என்று காவல் துறையினர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT