Published : 18 Jul 2020 10:22 AM
Last Updated : 18 Jul 2020 10:22 AM

கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியவர்களுக்கு கடும் தண்டனை தேவை; ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

முருகக் கடவுளின் பெருமையைக் கூறும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியவர்களுக்குக் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 18) வெளியிட்ட அறிக்கை:

"தமிழர்களுடைய கடவுளான முருகனை இழிவுப்படுத்தும் வகையிலே கந்தசஷ்டி கவசப் பாடலின் பொருளை பெருமையை தவறான பொருள்பட திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செயல் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல். இது மிகவும் கண்டிக்கதக்கது. மிகுந்த வேதனைக்குரியது.

மதங்களைப் பற்றி வெளிப்படையாக அவதூறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. குறிப்பாக, எம்மதமானாலும் இறை நம்பிக்கையை இழிவுப்படுத்துவது மதத்தை அவமானப்படுத்துவதுதாகும். எனவே, இதனை தவறான நோக்கத்தோடு வெளியிட்ட 'கருப்பர் கூட்டத்தினர்' மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மறைந்த தலைவர்களை அவமதிக்கும் வகையிலே செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x