Published : 17 Jul 2020 06:19 PM
Last Updated : 17 Jul 2020 06:19 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 180 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று காலையில் கண்டறியப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 2228 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் 77 பேர், அம்பாசமுத்திரம்- 18, சேரன்மகாதேவி- 16, களக்காடு 8, மானூர் 5, நாங்குநேரி 6, பாளையங்கோட்டை தாலுகா 22, பாப்பாக்குடி 5, ராதாபுரம்- 13, வள்ளியூர்- 10 என்று மொத்தம் 180 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2408 ஆக அதிகரித்துள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு:
திருநெல்வேலி மாநகரில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மெகா கிருமி நாசனி தெளிப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற இப்பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்புப் படையினர் கிருமி நாசினி தெளித்தனர்.
அத்துடன் 12 மாநகராட்சி வாகனங்கள், 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்களும் கிருமி நாசனி தெளிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT