Published : 15 Sep 2015 10:39 AM
Last Updated : 15 Sep 2015 10:39 AM
கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ நூல் திருச்சி மத்திய சிறையில் தினமும் வாசிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாதம் ஒருமுறை தேர்வு நடத்தி, கைதிகளுக்கு ‘பம்பர் பரிசு’ வழங் கவும் சிறைத் துறை திட்டமிட் டுள்ளது.
தொழிற்பயிற்சிகள், யோகா
திருச்சி மத்திய சிறையில் விசா ரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புச் சட்ட கைதிகள் என 1,343 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் களின் மறுவாழ்வுக்காக ஹாலோ பிளாக் கற்கள் தயாரித்தல், வெல்டிங், தையல் பயிற்சி, காளான் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மனதளவில் அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தினமும் யோகா பயிற் சியும் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய முயற்சி யாக காந்தியின் சுயசரிதை நூலான ‘சத்திய சோதனை’யில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை தினமும் கைதிகளுக்கு கற்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியான சகாதேவன் தினமும் சிறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒலிவாங்கி மூலம் சத்திய சோதனை புத்தகத்தை வாசிக்கிறார். சிறையில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி கருவிகள் மூலம் அனைத்து கைதிகளும் இதைக்கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கைதிகளிடம் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று சிறைத் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மத்திய சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் கூறியது: சிறையில் உள்ள அனை வருமே கெட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலையா லும், தவறான வழிகாட்டுதல் களாலும் பலர் சிறைக்கு வர நேரி டுகிறது. அதுபோன்ற நபர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்காவிட் டால், அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, கைதிகளை நல்வழிப்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
அமைதி வழியில் செல்ல..
சத்திய சோதனை நூலில், ஒரு மனிதன் அமைதி வழியில் செல்வதற்கான பல நல்ல தகவல்கள் உள்ளன. 5 பாகங்களாக, 168 அத் தியாயங்களைக் கொண்டுள்ள இந்த நூலின் கருத்துகளை கைதி களிடம் கொண்டு சேர்க்கும் பணி யைத் தொடங்கியுள்ளோம்.
தினமும் கைதிகள் அறையிலி ருந்து வெளியே வந்தவுடன், காலை 6.15 மணி முதல் 6.30 மணி வரை 15 நிமிடம் சத்திய சோதனையின் ஒரு அத்தியாயம் வாசிக்கப்படுகிறது. கைதிகளில் பலர் இதை ஆர்வமுடன் கேட்கின்றனர். அவர்களில் சிலருக்கு மனமாற்றம் ஏற்பட்டால்கூட, அதுவே எங்க ளுக்கு வெற்றிதான்.
பம்பர் பரிசு
எனினும், அனைவர் மனதிலும் சத்திய சோதனையின் கருத்துகளை பதியவைப்பதற்காக ‘பம்பர் பரிசு’ திட்டம் என்ற புதிய முயற்சியைக் கையிலெடுத்துள்ளோம். அதாவது, சத்திய சோதனையின் ஒவ்வொரு பாகமும் முடிந்தபிறகு, அதில் உள்ள முக்கிய கருத்துகளை கேள்வி வடிவமாக மாற்றி, மாதம் ஒருமுறை தேர்வு நடத்தப்படும். இதற்கான பதில்கள் ‘ஆப்ஷனல் டைப்பாக’ இருக்கும். அனைத்துக் கைதிகளும் கட்டாயம் இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என அறிவித்துள்ளோம்.
அதிக மதிப்பெண் பெறும் கைதிகளுக்கு, அவர்களே வியக் கும் வகையில் ‘பம்பர் பரிசு’ அளிக்கப்படும். முதல் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது என்றார்.
இதேபோல, அனைத்து சிறை களிலுமே சத்திய சோதனை உள் ளிட்ட நூல்களை வாசிக்கச் செய்து, கைதிகளின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத் துறையினர் முயற்சிக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர் பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT