Published : 17 Jul 2020 07:22 AM
Last Updated : 17 Jul 2020 07:22 AM
செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூர் அருகே செங்காடு கிரா மத்தில் கடந்த 11-ம் தேதியன்று கோயில் நிலத்தில் திருப் போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமார் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், குமார் தரப்பினர் மீது எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டதில், சீனிவாசன் என்பவர் காயமடைந்தார். இது தொடர் பாக, இதயவர்மன் எம்எல்ஏ, ரியல் எஸ்டேட் அதிபர் குமார் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மேலும், எம்எல்ஏ பயன் படுத்திய 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், செங்காடு கிராமத் தில் எம்எல்ஏ வீட்டில் மேலும் சில துப் பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து, அங்கு சோதனை நடத்த நீதி மன்றத்தில் போலீஸார் அனுமதி பெற் றனர். தொடர்ந்து மாமல்ல புரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு எம்எல்ஏ வீட்டில் சோதனை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரம் நடை பெற்ற சோதனையில் ‘ஏர் ரைபிள்’ வகையை சேர்ந்த ஒரு துப்பாக்கி, துப்பாக்கி குண்டு தயாரிக் கும் இயந்திரம் மற்றும் ஏற்கெனவே இதயவர்மன் எம்எல்ஏவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கிக் கான 4 குண்டுகள், துப்பாக்கி குண்டு கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
‘துப்பாக்கி குண்டுகள் தயாரிப்பதற் கான குப்பி, வெடிமருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள், குண்டு தயாரிக்கும் இயந்திரங்கள் போன்றவை இவர் களுக்கு எப்படி கிடைத்தன என விசா ரணை நடத்தி வருகிறோம். துப்பாக்கி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT