Published : 15 Jul 2020 09:00 PM
Last Updated : 15 Jul 2020 09:00 PM

கல்வித் தொலைக்காட்சி: வகுப்புகள், பாடம், நேரம்; அட்டவணை வெளியானது

சென்னை

கல்வித் தொலைக்காட்சி மூலம் நடக்கும் பாடம், வகுப்புகள், நேரம், என்ன பாடம் என்பதற்கான பட்டியலையும், அலைவரிசை நிறுவனங்கள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடக்கும் நேரம்:

2-ம் வகுப்பு மாலை 5 முதல் 5:30 மணி வரை

3-ம் வகுப்பு மாலை 5:30 முதல் 6 மணி வரை

4-ம் வகுப்பு மாலை 6 முதல் 6:30 மணி வரை

5-ம் வகுப்பு மாலை 6:30 முதல் 7 மணி வரை

இது தவிர 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும், நீட் ஜெஇஇ-க்கான வகுப்புகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன.

கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும். இதனைக் கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.

சேனல் எண்கள், நிறுவன விவரம்:

1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200

2.SCV - 98

3. TCCL - 200

4. VK DIGITAL - 55

5. AKSHAYA CABLE - 17

6. Youtube - shorturl.at/pJKV0

இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தினசரி நடக்கும் பாடங்கள், வகுப்பு, நேரம் வாரியான பட்டியல்


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x