Published : 15 Jul 2020 07:17 AM
Last Updated : 15 Jul 2020 07:17 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு வருவாய் கோட்டங்களை தொடர்ந்து 3-வதாக ஆரணியை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது.
இதையடுத்து, ஆரணி வருவாய் கோட்ட அலுவலகம் கட்டுவதற்கு ரூ.2.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணியை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
இதையடுத்து, ஆரணியில் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர்பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பிரமிளா தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி இனிப்பு வழங்கினார். ஒப்பந்ததாரர் உஷாராணி சங்கர் வரவேற்றார். அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கர், ஆவின் துணைத் தலைவர் பாரி பாபு, நகர அதிமுக செயலாளர் அசோக்குமார், ஒன்றியச் செயலாளர் சேகர், மாவட்ட பாசறை செயலாளர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், ராதாகிருஷ்ணன், திருமால், ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் கருணாகரன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஜோதிலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT