Published : 14 Jul 2020 09:02 PM
Last Updated : 14 Jul 2020 09:02 PM
சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றுலா வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் அங்கபிரதட்சணம் செய்து போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட சுற்றுலா வேன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தினர் சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் முழங்கியபடி, அலுவலக வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்தனர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கி மனுவில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கடந்த 4 மாதங்களாக சுற்றுலா வேன் இயக்கப்படவில்லை. ஆனால், காலாண்டு வரி செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.
மேலும், இன்சூரன்ஸ், வாகன உரிமம் புதுப்பித்தல், மாத கடன் தவணை உள்ளிட்டவைகள் செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். வேன்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தி 2 ஆண்டுகள் தான் ஆகிறது.
ஆனால், தற்போது மீண்டும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தினால் தான் வாகன உரிமம் புதுப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வேன் இயக்க இ-பாஸ் தேவை உள்ளது. அதற்கு விண்ணப்பித்தால் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் 7 பேருக்கு மேல் பயணம் செய்ய இயலாது.
இதனால் நாங்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே, வேன்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT