Published : 07 Sep 2015 09:58 AM
Last Updated : 07 Sep 2015 09:58 AM

கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வெங்காய வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.52 ஆக குறைந்தது

கர்நாடகம் மற்றும் ஆந்திரம் மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்திருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் அதன் விலை கிலோ ரூ.52 ஆக குறைந் துள்ளது.

நாட்டிலேயே அதிக வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலமான மகாராஷ்டிரத்தில் பெய்த பருவம் தவறிய மழையால் வெங்காய நடவு பாதிக்கப்பட்டது. விலையேற்றம் ஏற்படும் என்று இருப்பில் வைத் திருந்த வெங்காயத்தை அதிக அளவில் விவசாயிகள் வெளியில் கொண்டுவராததால் கடந்த ஜூலை 2-வது வாரத்தில் நாடு முழுவதும் வெங்காய விலை உயரத் தொடங்கியது. பல நகரங்களில் தரத்துக்கேற்ப கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

விலையை கட்டுப்படுத்த டெல்லி அரசு அடக்கவிலை கடைகளில் வெங்காயத்தை கிலோ ரூ.40-க்கு விற்றது. தமிழக அரசு பண்ணை பசுமைக் கடைகளில் ரூ.55-க்கு விற்றது

வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்து, சீனா போன்ற நாடுகளில் இருந்து 10 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு தீர்மானித்தது. தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக கடந்த ஜூலை மாத இறுதியில் டெண்டர் கோரப்பட்டது. அதில் ஒருவரும் பங்கேற்கவில்லை.

கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.60-க்கும் (சில்லறை விற்பனையில்), ஜாம் பஜார் மார்க்கெட்டில் ரூ.60-க்கும் விற்கப்பட்ட வெங்காயம் நேற்றைய நிலவரப்படி, கோயம்பேடு மார்க் கெட்டில் ரூ.52 (சில்லறை விற்பனை யில்), ஜாம்பஜாரில் ரூ.50 என விலை குறைந்துள்ளது.

வரத்து அதிகரிப்பு

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.ஜான் கூறும் போது, “கோயம்பேடு மார்க் கெட்டில் வெங்காய விலை குறைவுக்கு எகிப்து நாட்டு வெங் காயம் வருகை ஒரு காரணம். இதற்கிடையில் தற்போது கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநி லங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்துள்ளது.

தினமும் 60 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வெங்காய விலை குறைந்து வருகிறது. மொத்த விலையில் கிலோ ரூ.42-க்கு விற்பனை செய்கிறோம்” என்றார்.

தட்டுப்பாடு இல்லை

கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத் தில் வெங்காய விலை உயர்ந்தி ருந்தாலும், தட்டுப்பாடு ஏற்படவில்லை. இங்கு மாற்றாக சின்ன வெங்காயம் உள்ளது. வட மாநிலங்களில் சின்ன வெங்காய உற்பத்தி இல்லாததால் பாதிப்பு அதிகமாக இருந்தது” என்றார்.

கைபேசி செயலியில் ஆர்டர் செய்த வட மாநிலத்தினர்

வெங்காய விலையேற்றம் வட மாநிலத்தினரை கடுமையாக பாதித்துள்ள நிலையில், அம்மாநில மக்கள் Grofers, Peppertap, SRS Grocery போன்ற கைபேசி செயலிகள் மூலமாக மின் வணிக முறையில் வெங்காயம் ஆர்டர் செய்து பெற்றுள்ளனர். அவ்வாறு வாங்கும்போது, வெளிச் சந்தையை விட சற்று விலை குறைவாக இருந்ததாகவும், வீட்டுக்கே வந்து டெலிவரி செய்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், இம்முறையில் பொருட்கள் வாங்குவதை ஊக்கப்படுத்த, வெங்காயத்துடன் கறிவேப்பிலை கொத்து, எலுமிச்சை போன்றவை சேர்த்து வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x