Published : 13 Jul 2020 08:02 AM
Last Updated : 13 Jul 2020 08:02 AM

கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் மீதான நடவடிக்கை ரத்து: மதுரை காவல் ஆணையர் நடவடிக்கை

மதுரை

மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(40) ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவில் கர்ப்பிணிகளுக்கு இலவசம். ஊரடங்கால் அவர் வீட்டில் இருந்தார்.

கடந்த 8-ம் தேதி பகலில், அதே பகுதியில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி ஒருவரை, இவர் தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

திரும்பி வரும்போது கோரிப்பாளையம் சந்திப்பில் போலீஸார், இவரது ஆட்டோவை வழிமறித்து விசாரித்தனர். கர்ப்பிணிக்கு இலவசமாக உதவியதாக அவர் கூறியதையும் கேட்காத போலீ ஸார், அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இதனால் விரக்தி அடைந்த முத்துக்கிருஷ்ணன், தனது நிலை குறித்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவின் கவனத்துக்குச் சென்றது. அவர் உடனடியாக அபராத தொகையை ஆட்டோ ஓட்டுநரிடம் திரும்ப வழங்கவும், வழக்கை ரத்து செய்யவும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x