Last Updated : 11 Jul, 2020 06:42 PM

 

Published : 11 Jul 2020 06:42 PM
Last Updated : 11 Jul 2020 06:42 PM

குமரியில் பொது இடங்களில் தனிமனித இடைவெளியின்றி மக்கள் கூடுவதால் தொற்று அதிகரிப்பு: கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1300-ஆக அதிகரிப்பு

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீலை மாத தொடக்கத்தில் இருந்து கரோனா அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கிராம, நகரப் பகுதிகளில் கரோனா தொற்று பரவுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குழித்துறை அஞ்சலக ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அஞ்சலகம் மூடப்பட்டது.

இதைப்போல் நாகர்கோவில் ஆயுதப்படை பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இரு மருத்துவர்ககள், 4 செவிலியர்கள் கரோனா தொற்று ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகர்கோவில் கோட்டாறு மார்க்கெட்டில் ஏற்கெனவே 20 பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த இஸ்ரோ ஊழியர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 150 பேருக்கு மேல் கரோனா தொறறு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் குமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1300 ஆக அதிகரிதுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்த கொள்முதல் சந்தைகள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பரவலாக காய்கறி சந்தைகள், மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகளில் தனி மனித இடைவெளியின்றி மக்கள் கூடுவதால் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக குமரி கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையை அடுத்துள்ள திருத்துவபுரத்தில் உள்ள சந்தையில் இடைவெளியின்றி மக்கள் முண்டியடித்து கூடுவதால் அப்பகுதி மக்கள் கரோனா அச்சத்தில் உள்ளனர். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுஇடங்களில் மக்கள் அதிக அளவில் அப்பகுதி மக்கள் கரோனா அச்சத்தில் உள்ளனர்.

எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x