Published : 10 Jul 2020 07:10 AM
Last Updated : 10 Jul 2020 07:10 AM
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெருந்தொற்று பாதிப்பு ஏற்கெனவே 5,513 ஆக இருந்தது. நேற்று அதிகபட்சமாக 364 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,877 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் 7,217 ஆக இருந்தது. நேற்று 169 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,386 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 145 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சியில் ஏற்கெனவே 2,971 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று மதுராந்தகம் கிளைச் சிறையின் 5 கைதிகள், ஒரு சிறைக் காவலர் உட்பட புதிதாக 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்பு 3,038 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,216 பேர் குணமடைந்துள்ளனர்; 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில்...
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 169 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,496 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே 2,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 69பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT