Last Updated : 09 Jul, 2020 08:06 PM

 

Published : 09 Jul 2020 08:06 PM
Last Updated : 09 Jul 2020 08:06 PM

சென்னை- குமரி போலி இ-பாஸ்: பயணிகளை ஏற்றி வந்த வேன் பறிமுதல்; ஓட்டுநர் கைது

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களில் பலர் உரிய இ-பாஸ் இன்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே பலர் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று சென்னை அம்பத்தூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வேனில் செல்வதற்காக ஓட்டுநர் உட்பட 8 பேர் இ-பாஸ் அனுமதி பெற்றிருந்தனர். இந்த வேன் இன்று குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் வந்தபோது போலீஸார், மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை செய்தனர். அப்போது வேனில் ஓட்டுநருடன் 9 பேர் இருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கிடைத்தன. அவர்கள் யாரும் திருவனந்தபுரம் செல்லவில்லை. அனைவருமே குமரி மாவட்டம் திக்கணங்கோடு, மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அத்துடன் இ-பாஸில் வேறு நபரின் பெயர் இடம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.

இதனால் சென்னையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ராம்ராஜ் (38) என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். வேனைப் பறிமுதல் செய்து அதில் இருந்த 8 பேரைக் கன்னியாகுமரி தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x