Published : 08 Jul 2020 07:47 AM
Last Updated : 08 Jul 2020 07:47 AM
திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 10-ம் வகுப்பில் சேர்வதற்காக காத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி ஜியாவுல் ஹக் மற்றும் சோமரசம்பேட்டை போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறுமியின் உடலைக் கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, சிறுமியின் மரணத்துக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமி யின் உறவினர்கள் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மத்திய மண்டல ஐஜி எச்.எம்.ஜெயராம் நேற்று சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று இவ் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியபோது, “சிறுமியின் மரணம் தொடர்பாக ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர் களைக் கொண்ட 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய தடயங்களும் கிடைத்துள்ளன” என்றார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா கூறும்போது, “11 தனிப் படைகள் மட்டுமல்லாமல் 6 புலனாய்வுக் குழுக்கள் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான தடயங்கள் ஏதும் கண்டறியப்ப டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே கொலையா அல்லது தற்கொலையா என்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்” என்றார்.
இதற்கிடையே மாணவியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித் துள்ள திருச்சி தொகுதி எம்.பி சு.திருநாவுக்கரசர், “இதுபோன்ற வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த காவல் துறையினர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT