Published : 08 Jul 2020 07:25 AM
Last Updated : 08 Jul 2020 07:25 AM

ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை

ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த பகுதியில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.50 கோடியே 80 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியது.

இதற்கான கட்டுமான பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ம் தேதி முதல்வர் பழனிசாமி மற்றும்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, 50,422 சதுர அடிபரப்பளவில் நினைவிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நினைவிட பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் துணைமுதல்வர்ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பணிகளின் தற்போதைய நிலை, அடுத்தகட்டபணிகள், நினைவிட திறப்புகுறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x