கரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் எஸ்டிபிஐயினருக்கு உண்டியல் பணத்தை தானமாகக் கொடுத்த சிறுமி

கரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் எஸ்டிபிஐயினருக்கு உண்டியல் பணத்தை தானமாகக் கொடுத்த சிறுமி

Published on

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது உண்டியல் பணத்தை எஸ்டிபிஐ கட்சியினருக்கு முகக்கவசம், கவச உடை வாங்க வழங்கியுள்ளார். அந்தச் சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில்,நெல்லையிலும் அதன் தாக்கம் அதிகரித்து, இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் தன்னார்வலார்கள் இந்தியா முழுவதும் கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அவரவர் மத வழக்கப்படி அடக்கமும், தகனமும் செய்து வருகின்றனர்.

குறிப்பாக நெல்லையில் இதுவரை 7-க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

இதனைப் பார்த்துவிட்டு நெல்லை அருகே மேலப்பாளையத்தை சார்ந்த ஆசிகா இவர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இச்சிறுமி, தான் சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்த உண்டியல் பணம் 2500 ரூபாயை எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அந்தச் சிறுமியின் செயலை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in