Last Updated : 03 Jul, 2020 04:31 PM

2  

Published : 03 Jul 2020 04:31 PM
Last Updated : 03 Jul 2020 04:31 PM

புதுச்சேரி, காரைக்கால் நகராட்சிகள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை; கிரண்பேடி குற்றச்சாட்டு

கிரண்பேடி: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்கால் நகராட்சிகள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஜூலை 3) சமூக வலைதளத்தில் பதிவிட்டதன் விவரம்:

"நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகள் கரோனா தடுப்புப் பணிகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்படுத்துவதிலும், தனிமனித இடைவெளி, சுகாதாரம், பொதுநலன் காப்பதிலும் சரியாக கவனம் செலுத்தவில்லை.

கிராமப்புறங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. புதுச்சேரி, காரைக்கால் நகராட்சி, ஏராளமான கொம்யூன் பஞ்சாயத்துகள் புரிந்து கொள்ளவில்லை. கடமையைச் சரியாகச் செய்யவில்லை. எத்தனை முறை சொல்ல வேண்டியுள்ளது? பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.

தொழிலாளர் துறை, ஆரோக்கிய சேது வழக்கு எண்ணிக்கையின் விவரத்தை துறைச் செயலருக்குத் தெரிவிக்க வேண்டும். காரைக்கால் பகுதியைப் பொருத்தமட்டில் ஆரோக்கிய சேது செயலி உபயோகம் பூஜ்ஜியமாக உள்ளது. ஆரோக்கிய சேது செயலி உபயோகம், வில்லியனூர் பகுதியில் படு மோசமாக உள்ளது.

செயலி மற்றும் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதால், மருத்துவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தம் குறையும். அதுபோல் விதிமீறல் மீது பதியப்படும் வழக்குகள், மக்கள் மருத்துவமனைக்குச் செல்வதைக் குறைக்கும்".

இவ்வாறு கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x