Published : 02 Jul 2020 07:33 AM
Last Updated : 02 Jul 2020 07:33 AM
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் கோபாலன்(68), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மகன் வாசுதேவன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளர்.
அப்பகுதியில் உள்ள அபினவ் தீர்த்தசுவாமி மடத்தின் பொறுப்பாளராக கோபாலன் இருந்துவந்தார். இந்த மடத்துக்கு சொந்தமான 13 கடைகள் அப்பகுதியில் உள்ளன. இங்கு கடை நடத்தியவர்களில் பலர் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்ததால், மடத்தின் நிர்வாகத்தினர் கூறியதன்பேரில், அனைவரும் கடைகளை காலி செய்துவிட்டனர்.
ஆனால், அங்கு டெய்லர் கடை நடத்திவந்த பாஜகவின் நாச்சியார்கோவில் நகரத் தலைவரான சரவணன்(48) மட்டும், கடையை காலி செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் கோபாலன் தொடர்ந்த வழக்கில், கடையை காலிசெய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடை காலி செய்யப்பட்டது. இதனால், கோபத்தில் இருந்துவந்த சரவணன் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் சென்று, தன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த கோபாலனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில், கோபாலன் உயிரிழந்தார். நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT