Published : 02 Jul 2020 07:27 AM
Last Updated : 02 Jul 2020 07:27 AM

ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபானக் கடைகள் இயங்காது: டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு

சென்னை

தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் ஜூலை மாதத்தின் 5,12,19,26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற மாவட்ட பகுதிகளில் தற்போது டாஸ்மாக் மதுபானக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை6-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் 5,12,19,26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று பால், குடிநீர் விநியோகம், மருத்துவ சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன.

எனவே, அந்த 4 ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவது என டாஸ்மாக் நிறுவனம் முடிவெடுத்து, இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x