Published : 01 Jul 2020 10:49 AM
Last Updated : 01 Jul 2020 10:49 AM
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 1) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதல்வர் தலைமையில் கரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்புகள் மற்றும் மனித வளத்தை மேம்படுத்துதல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தவிர, விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் உயர்தர ஊசி, மருந்துகளையும் தருவித்து, மாவட்ட அளவில் இருப்பில் வைத்து கரோனா சிகிச்சை முறைகளை வலுவூட்டி வருகிறது.
இதன் ஓர் அங்கமாக ஆக்சிஜன் செல்லும் குழாய்களை பொதுப்பணித்துறையின் மூலம் அமைப்பதற்கு முதல்கட்டமாக ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் 59 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் செல்லும் குழாய்கள் அமைப்பதற்கும், சலவையகம், மத்திய கிருமி நீக்க மையம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும். தமிழ்நாடு முதல்வரின் இம்மக்கள் நலன் காக்கும் பணிகள் தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையை மேலும் வலுப்படுத்தும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT