Published : 28 Jun 2020 07:31 AM
Last Updated : 28 Jun 2020 07:31 AM

தொழில் நிறுவனங்களில் 33 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே பயண அனுமதி: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் திட்டவட்டம்

சென்னை

தொழில் நிறுவனங்களில் 33 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே பயண அனுமதி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை புளிந்தோப்பில் நடந்த கரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதியில் கரோனாவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தகடந்த மே 8-ம் தேதி முதல் பொதுமக்களைத் தேடிச் சென்று இதுவரை 8,426 முகாம்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 5 லட்சத்து 48ஆயிரத்து 989 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 20,443 பேருக்கு கரோனா அறிகுறி இருந்தன. அதில்மருத்துவர்கள் பரிந்துரை அடிப்படையில் 16,845 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கரோனா பாதித்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வருவதால், சென்னையில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் 33 சதவீதபணியாளர்களுடன் இயங்க அரசுஅனுமதித்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனங்களைச் சேர்ந்த 33 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே பயண அனுமதி வழங்கப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் பயண அனுமதி வழங்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x