Published : 27 Jun 2020 05:41 PM
Last Updated : 27 Jun 2020 05:41 PM
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகளை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலருமான மகேசன் காசிராஜன் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாக ஐஏஎஸ் நிலையிலான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட சிறப்பு அதிகாரியும், தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை செயலருமான மகேசன்காசிராஜன் சிவகங்கை அரசு மருத்துவமனை, காரைக்குடி அமராவதி புதூர் மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பதிப்பு குறைவாக உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையின் முன்னேற்பாடே காரணம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாவட்ட முழுவதும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிவகங்கை பழைய அரசு மருத்துமனை கட்டிடத்தில் 140 படுகைகள் வசதி இருந்தது. தற்போது மேலும் 100 படுகைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அமராவதி புதூர் மருத்துவமனையிலும் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வட்டார அளவில் 18 இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், என்று கூறினார்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனாள், முகமதுரபீக், சுகாதாரத்துறை மருத்துவ கண்காணிப்பு அலுவலர் அரவிந்தஆதவன் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT