Last Updated : 24 Jun, 2020 08:45 PM

1  

Published : 24 Jun 2020 08:45 PM
Last Updated : 24 Jun 2020 08:45 PM

திருப்புவனம் தெப்பக்குளம் திறப்பு விழாவில் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்பு- சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் சர்ச்சை

தமிழகத்தில் வழிபாட்டுதலங்கள் திறக்க தடை உள்ளநிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தெப்பக்குளம் திறப்பு விழாவில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் வழிபாட்டுதலங்களை திறக்கவும் அரசு தடை விதித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்புவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தெப்பக்குளம் மற்றும் மைய மண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், எஸ்.நாகராஜன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி செந்தில்நாதன், கோட்டாட்சியர் சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றதால் சமூக இடைவெளியும் கடைபிடிக்கவில்லை.

வழிபாட்டுதலங்கள் திறக்க தடை உள்ளநிலையில் தெப்பக்குளம் திறப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x