Published : 23 Jun 2020 03:46 PM
Last Updated : 23 Jun 2020 03:46 PM
மதுரையில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக அங்குள்ள மக்களுக்கும் சென்னையைப்போல் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் சென்னையைப்போல கூட்டம் சேர்க்காமல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
“கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 1/2
சென்னையைப் போல மக்களைக் கூட்டமாக சேர்க்காமல் அவரவர் வீடுகளுக்கே சென்று இந்த நிதியை வழங்கிட வேண்டும். மேலும் மதுரையில் ஊரடங்கு அமலாகும் இடங்களில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் கட்டணமில்லாமல் உணவு அளிப்பதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”. @CMOTamilNadu
சென்னையைப் போல மக்களைக் கூட்டமாக சேர்க்காமல் அவரவர் வீடுகளுக்கே சென்று இந்த நிதியை வழங்கிட வேண்டும். மேலும் மதுரையில் ஊரடங்கு அமலாகும் இடங்களில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் கட்டணமில்லாமல் உணவு அளிப்பதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 2/2 @CMOTamilNadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 23, 2020
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT