Published : 23 Jun 2020 07:47 AM
Last Updated : 23 Jun 2020 07:47 AM
விடுமுறைக்கு ஊர் திரும்பிய ராணுவ வீரர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதி இன்றி தனிமைப்படுத்தும் மையத்தில் தவிப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவனந் தபுரம் விமான நிலையம் வழியாக கன்னியாகுமரி வருவோர் தமிழக, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் தீவிரமாக கண்காணிக் கப்படுகின்றனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டு, பரிசோதனை முடிவு தெரிந்த பின்னர் அங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஆற்றூரில் உள்ள கல்லூரி விடுதியில் ஜம்மு - காஷ்மீர், ராஜஸ் தானில் இருந்து வந்த ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்த 40-க்கும் மேற் பட்டோர் நேற்று முன்தினம் இரவு தங்க வைக்கப்பட்டனர். அந்த மையத்தில் உணவு, தண் ணீர் மற்றும் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இன்றி அவதியடைந்தனர்.
இதுகுறித்து புகார் தெரிவித்து ராணுவ வீரர்கள் பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில், இங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. வாளி, கப் இல்லாமல் கழிப்பறையை எப்படி பயன் படுத்துவது? இங்குள்ள பெண், தனது ஒன்றரை வயது கைக்கு ழந்தைக்கு சுடுதண்ணீர், பால் கிடைக்காமல் கடும் அவதி யடைந்து வருகிறார்.
சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், போலீஸாரிடம் புகார் அளித் தால் அலட்சியமாக பதில் அளிக் கின்றனர். முடிந்தால் இருங்கள், இல்லையென்றால் செல்லுங்கள். உங்கள் மீது கரோனா பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்படும் என்று மிரட்டுகின்றனர். புதர்கள் மண்டி, பாழடைந்து கிடக்கும் மையத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, உணவின்றி தவித்த ராணுவ வீரர்களுக்கு, இப்பகுதி முன்னாள் ராணுவத் தினர், பழம் மற்றும் உணவு வழங்கினர்.
இதுதொடர்பாக, திருவட்டாறு வட்டாட்சியர் அஜிதாவிடம் கேட்டபோது, ஆற்றூர் தனிமைப் படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்படும் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளோம். அவர்கள் பணம் கொடுத்து விரும் பியவாறு வெளியில் இருந்து உணவு வாங்கவும், உறவினர்கள் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இலவசமாக அம்மா உணவகம் மூலம் உணவு வரவழைத்து கொடுக்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT