Published : 20 Jun 2020 07:56 AM
Last Updated : 20 Jun 2020 07:56 AM

கரோனா பரிசோதனைக்கு நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமான ஆய்வகங்கள்: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்றை கண்டறியும் ஆய்வகத்தை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்து பார்வையிட்டார். உடன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்பி விஜயகுமார்.

திருப்பத்தூர்

இந்தியாவிலேயே கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் ஆய்வகங்கள் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளன என வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்றை கண்டறியும் புதிய ஆய்வகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் தலைமை வகித்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலை வகித்தார். வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவைரஸ் தொற்றை கண்டறியும் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

அப்போது, அவர் பேசும்போது, “இந்தியாவிலேயே அதிகப்படியாக 60 ஆய்வகங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 43 அரசு மருத்துவமனைகளிலும், 26 தனியார் மருத்துவமனைகளிலும் உள்ளன. தற்போது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக கரோனா பரிசோதனை ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் மரபணு தொடர்பான நோய்கள், அனைத்து வகையானவைரஸ் நோய்கள் ஆகியவற்றைமிகத் துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறியும் வசதி உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x