Published : 19 Jun 2020 09:57 AM
Last Updated : 19 Jun 2020 09:57 AM
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனைக்கு நேற்று சென்றார். பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, “அமைச்சருக்கு லேசான தொற்று உள்ளது. அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது” என்றனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் முதுநிலை தனிச் செயலாளர் தாமோதரன் நேற்று முன்தினம் உயிரிழந்ததையடுத்து, முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அலுவலக கார் ஓட்டுநர், 2 உதவியாளர்கள், துணை செயலாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர மேலும் ஒரு அமைச்சர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT