Published : 19 Jun 2020 07:40 AM
Last Updated : 19 Jun 2020 07:40 AM

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு பணிகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: கள ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பு பொறுப்பு

சென்னை

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு பணிகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்றுநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 15 மண்டலங்களுக்கு கள ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதேபோல்,இதர மாவட்டங்களுக்கும் சிறப்புகண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் இ.சரவண வேல்ராஜ், பெரம்பலூர்- மாநில திட்டக்குழு துணைத்தலைவர் அனில் மேஷ்ராம், கோவை - நகராட்சி நிர்வாக செயலர் ஹர்மந்தர் சிங், நீலகிரி - குன்னூர் இண்கோசர்வ் மேலாண் இயக்குநர் சுப்ரியா சாஹூ, கடலூர்- வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, தருமபுரி - தமிழ்நாடு கைத்திறன் மேம்பாட்டுக்கழக தலைவர் சந்தோஷ் பாபு, திண்டுக்கல்- வரலாற்று ஆவண ஆணையர்மங்கத்ராம் சர்மா, ஈரோடு - தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக தலைவர் காக்கர்லா உஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கன்னியா குமரி- பதிவுத்துறை தலைவர் பி.ஜோதி நிர்மலாசாமி, கரூர்- மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் சி.விஜயராஜ்குமார், திருச்சி- சர்க்கரைத் துறைஆணையர் ரீட்டா ஹரிஷ் தாக்கர்,கிருஷ்ணகிரி- வணிகவரி மற்றும்பதிவு துறை செயலர் பீலா ராஜேஷ்,மதுரை- போக்குவரத்துத் துறைசெயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், புதுக்கோட்டை- கைத்தறித் துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், தஞ்சை- சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் பிரதீப் யாதவ், நாமக்கல்- உணவுத் துறை செயலர் தயானந்த கட்டாரியா, சேலம்- தொழிலாளர் துறை செயலர் முகமது நசிமுத்தீன், விருதுநகர்- சமூகநலத் துறை செயலர் எஸ்.மதுமதி, தூத்துக்குடி- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் குமார் ஜெயந்த்ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளனர்.

அதேபோல், நாகை-ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் சி.முனியநாதன், ராமநாதபுரம் - பிற்படுத்தப்பட்டோர் நலசெயலர் பி.சந்திரமோகன், சிவகங்கை- செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், திருவாரூர்- பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன், தேனி- நெடுஞ்சாலைத் துறை செயலர் ஏ.கார்த்திக், திருவண்ணாமலை- பள்ளிக்கல்வி செயலர் தீரஜ்குமார், நெல்லை-உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா, திருப்பூர்- கால்நடைத்துறை செயலர் கே.கோபால், வேலூர்- வீட்டுவசதித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, விழுப்புரம்- தொழில் துறை செயலர் என்.முருகானந்தம், கள்ளக்குறிச்சி- தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் எஸ்.நாகராஜன், தென்காசி- தொழில்துறைஆணையர் அனு ஜார்ஜ், திருப்பத்தூர்- போக்குவரத்துதுறை ஆணையர் டி.எஸ்.ஜவகர்,

ராணிப்பேட்டை- வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் ஜி.லட்சுமிப்பிரியா ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, செங்கல்பட்டு - தொல்லியல் துறை ஆணையர் டி.உதயச்சந்திரன், திருவள்ளூர்- நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், காஞ்சிபுரம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்கெனவே கள ஒருங்கிணைப்பு குழுஅதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களே தற்போது சிறப்பு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கு கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோன்று தற்போது இதர மாவட்டங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x