Published : 17 Sep 2015 12:52 PM
Last Updated : 17 Sep 2015 12:52 PM

பிரையண்ட் பூங்காவில் சண்டிகர் ‘ராக் கார்டன்’: கொடைக்கானலில் புதிய திட்டம்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர தோட்டக்கலைத்துறை சார் பில், சண்டிகரில் இருப்பதைப் போன்ற ‘ராக் கார்டன்’ (கல் தோட்டம்) அமைக்கும் பணி மும் முரமாக நடைபெற்று வருகிறது.

பசுமையும், குளுமையும் நிறைந்த இயற்கையின் கொடை யான கொடைக்கானல், சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்து வருகிறது. தற்போது 2-வது சீசன் தொடங்கிய நிலையில் கொடைக்கானலுக்கு வெளிநாடு கள், வடமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் கோடை விழா மலர் கண்காட்சி நடக்கும் பிரையண்ட் பூங்கா முக்கிய சுற்று லாத்தலமாக உள்ளது. இந்த பூங்காவில் பெங்களூரு, ஓசூர், கொல்கத்தா, ஐதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பூச்செடி கள் வளர்க்கப்படுகின்றன.

கோடை காலத்தில் இந்த பூச்செடி களில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். இங்குள்ள கண்ணாடி மாளிகை, மரத்தோட்டம், புல்வெளி மைதானம் உள்ளிட்டவை பள்ளி குழந்தைகளையும், சுற்று லாப்பயணிகளையும் மிகவும் கவர்ந் துள்ளன.

தற்போது இந்த பூங்காவில் சுற்றுலாப்பயணிகள் வருகையை மேலும் அதிகரிக்க கால் ஏக்கரில் ‘ராக் கார்டன்’ (கல்தோட்டம்) அமைக்கப்படுகிறது. இதுவரை பூங்காவில் மலர் தோட்டத்தை மட்டுமே காண வரும் சுற்றுலாப் பயணிகள், பள்ளி குழந்தைகளுக்கு கல் தோட்டம் சிறந்த பொழுது போக்கு தலமாக அமையும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொ) கிஷோர்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஹரியாணா மாநிலம், சண்டிகர் பூங்காவில் 5 ஏக்கரில் அமைந்துள்ள கல் தோட்டமே இந்தியாவின் சிறந்த கல்தோட்டமாக அமைந்துள் ளது.

இந்த கல்தோட்டம், 1976-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதைக் காண, இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கின்றனர். அதைப் போன்ற, சிறிய அளவிலான கல் தோட்டம் பிரையண்ட் பூங்காவில் அமைக்கப்பட்டு வருகிறது.

கார்ட்டூன் சிலைகள்

இந்த கல் தோட்டத்தில் பாறை களில் மட்டுமே வளரும் கற்றாழை, கள்ளிச் செடிகள் உள்ளிட்ட விதவித மான முட்செடிகளை வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம். குழந்தை களைக் கவர உடைந்துபோன டைல்ஸ், கற்களைக் கொண்டு கார்ட்டூன் சிலைகளும் வைக்கப் படுகின்றன.

தற்போது பிரையண்ட் பூங்கா வுக்கு தினமும் 4 ஆயிரம் சுற்று லாப் பயணிகள் வருகின்றனர். கோடை சீசன், விநாயகர் சதுர்த்தி, ஓணம், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைக் கால விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவு இருக்கும். கல்தோட்டம் வந்தபின், சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x