Published : 18 Jun 2020 07:18 AM
Last Updated : 18 Jun 2020 07:18 AM
விழுப்புரம் அருகே உள்ள தி.மேட்டுப்பாளையம் சாணாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வயிற்று வலியால் அவதிப்பட்ட 70 வயதுடைய மூதாட்டி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை நடந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டு, நேற்று முன்தினம் அவரின் சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, அறுவை சிகிச்சைக்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில், மூதாட்டிக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
இதையடுத்து, சுகாதாரத் துறையினர் அந்த குடும் பத்தினரை தொடர்பு கொண்டு தகவலை கூற, உடலை தகனம் செய்த குடும்பத்தினர், உறவினர்கள் கரோனா தொற்று அச்சத்தில் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து நடந்த பரிசோதனையில், மூதாட்டியின் மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் சண்முகக்கனி யிடம் கேட்டதற்கு, “கரோனா பரிசோதனை முடிவு வரும் முன், இறந்தவரின் உடலை உறவினர் களிடம் ஒப்படைத்திருக்கக் கூடாது” என்றார்.
முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை.
இதற்கிடையே விழுப்புரம் விராட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கரோனா தொற்றால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது உடல் விழுப்புரம் நகராட்சி மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT