Published : 11 May 2014 02:25 PM
Last Updated : 11 May 2014 02:25 PM

தடைகளைத் தாண்டி தாய்மைப்பேறு!- சென்னை ஏ.ஆர்.சி. மையத்தின் மகத்தான சாதனை!

வேகமெடுத்துவரும் நகர் மயமாதல், உடலுழைப்பு குறைதல், சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மனச்சோர்வு, புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருட்களுக்கு அடிமை யாதல் உள்ளிட்ட காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

வயது முதிர்ந்து திருமணம் செய்துகொள்ளுதல், திருமண மான புதிதில் குழந்தை வேண்டா மென்று சில ஆண்டுகளுக்கு ஒத்திப் போடுதல் உள்ளிட்ட காரணங் களும் சமீப ஆண்டுகளாக அதிகரித் துவருவதாக சர்வதேசப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட பெண் கள் கருத்தரிப் பது என்பது சவாலான காரியம் தான். ஐ.வி.எஃப். (ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு பெண்ணின் சினை முட்டையுடன் சேர்த்து செயற்கை முறையில் கருத்தரிக்க வைப்பது.) முறையில் கூட இத்தகைய மருத் துவக் குறை பாடுள்ள வர்களைக் கருத்தரிக்க வைப்பதில் குறைந்த அளவே வெற்றி கிடைக்கிறது.

அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவு, கருவை வளர்த்து கருப்பையில் செலுத்திய பிறகு ஏற்படும் தோல்விகள், விந்தணுவுடன் வினைபுரிவதில் திறன்குறைவு, சிகிச்சைக்காகும் அதிக செலவு ஆகியவற்றால் ஐ.வி.எஃப். சிகிச்சையில் வெற்றி கிடைப்பது குறைந்தது.

சர்வதேச அன்னையர் தினத்தை யொட்டிய இச் சூழலில், குழந்தை யில்லாத அனைத்து தம்பதி யருக்கும் மகப்பேறு உண்டாக சென்னை ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆய்வு மையம் தன்னுடைய வாழ்த்து களை உளமாரத் தெரிவித்துக் கொள்கிறது.

டாக்டர் லட்சுமணன் சரவணனும் டாக்டர் மகாலட்சுமி சரவணனும் ஐ.வி.எஃப். சிகிச்சைக்குத் தம்பதிகளைத் தயார் செய்வதில் முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர். வெளிப்படை யான அணுகுமுறை, அனைத் தையும் முறையாக ஆவணப்படுத் தல், மருத்துவத் தொழிலின் தார்மிக நெறிகளையும் வழிகாட்டுதல் களையும் கடைப்பிடித்தல், சிகிச்சைச் செலவுகளைக் குறைத் தல், பல்வேறு விதமான தீர்வுகளை யும் அளித்தல் ஆகியவைதான் ஏ.ஆர்.சி. குழுவின் வெற்றிகளுக்கு முக்கியக் காரணங்களாக இருந்து வருகின்றன.

ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆய்வு மையம் கடந்த சில ஆண்டுகளில் 16 வெளிநாடுகளைச் சேர்ந்த தம்பதியருக்கு சிகிச்சை தந்து சர்வதேச தரத்துக்கு இணையான விகிதத்தில் வெற்றி களைக் குவித்துள்ளது. வெளி நாட்டவர்களுக்குத் தரமான சிகிச்சை அளிப்பதில் மருத்துவ ஆய்வுக்கான இந்தியக் கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) அங்கீகாரத்தையும், வெளி நாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் (எஃப்.ஆர்.ஆர். ஓ.) பாராட்டையும் பெற்று தனித்துவம் மிக்கதாக இருக்கிறது.

எதிர்கால லட்சியம்

1.கடினமான, சவாலான சந்தர்ப் பங்களில் மகப்பேறை அடைய தம்பதியருக்கு உதவுவது.

2. அனைத்துவகையான பொருளாதாரப் பிரிவினருக்கும் கட்டுப்படியாகும் செலவில் ஐ.வி.எஃப். சிகிச்சையை அளிப்பது.

3. மலட்டுத்தன்மையை நீக்கி, மகப்பேறை அடைய முடியும் என்ற விழிப்புணர்ச்சியையும் நம்பிக் கையையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படுத்துவது.

4. கருத்தரிப்பில் ஆய்வு, சிகிச்சை, சிகிச்சையில் வளர்ச்சி ஆகிய அம்சங்களில் உலக அளவில் நம்நாட்டை முன்னிலைக் குக் கொண்டு வருவது, அங்கீகாரம் பெற்றுத் தருவது ஆகியவை ஏ.ஆர்.சி மையத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x