Published : 14 Jun 2020 11:47 AM
Last Updated : 14 Jun 2020 11:47 AM
திருச்சியில் கரோனா பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் திடீரென உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிப் புதூர் ராமசந்திரா நகரைச் சேர்ந்தவர் குமாரசாமி, 32 வயதான் இவர் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
குறிப்பாக விமானநிலையம் மூலம் வரும் பயணிகளை திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமை முகாமில் இவர் பணியாற்றி வந்தார். தற்போது இந்த முகாம் கலைக்கப்பட்டு விட்டது.
நவலூர்குட்டப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக இவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இவர் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கும் சிகிச்சைப் பலனளிக்காமல் இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.
32 வயதில் இவர் மரணமடைந்திருப்பது இங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது, இவரது ரத்த மாதிரிகள் கரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT