Published : 14 Jun 2020 06:34 AM
Last Updated : 14 Jun 2020 06:34 AM
ரயில்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என கண்டறிய, உடல் வெப்ப பரிசோதனையில் நிரந்தரமான தொழில்நுட்ப கட்டமைப்பை மேற்கொள்ள ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி, அமெரிக்கா மற்றும்சில ஐரோப்பிய நாடுகளின் விமானநிலையங்கள், ரயில் நிலையங்களில் கடைபிடித்து வரும் ‘இரண்டு அடுக்கு தெர்மல் கேமராக்கள் சோதனை’ தொழில்நுட்ப வசதியை இந்தியாவில் கொண்டு வருவது குறித்து ரயில் டெல் நிறுவனம் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்துள்ள ரயில்வே வாரியம், ரயில் நிலையங்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை படிப்படியாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி ரயில் நிலையங்களின் நுழைவாயில்களில் இந்த 2 அடுக்குதெர்மல் கேமராக்கள் நிறுவப்படஉள்ளன. பயணிகள் வரும்போது ஒரு மீட்டர் தொலைவில் இருந்து கண்காணிக்கும் இந்த தானியங்கி கேமராக்கள், ஒரு நொடியில் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும். கூடுதல் உடல் வெப்பம் உள்ளவர்களை படம்பிடிப்பதோடு, அவர்கள்கடந்து செல்ல அனுமதிக்காமல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்தெரிவிக்கும். தடுத்து நிறுத்தப்படுபவர்கள் 2-ம் கட்ட சோதனைக்கான பாதையில் செல்ல வேண்டும். இந்த பாதையில் தெர்மல் கைப்பிடி கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். இது மிக அருகில் வெப்பத்தை சோதனை செய்து தெரிவிக்கும். நூறு சதவீதம் துல்லியமான நடைமுறையாக இது இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக டிஆர்இயு துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறும்போது, “கரோனா தொற்று உடனடியாக தீராது என்பதால் ரயில்டெல்லின் பரிந்துரையைரயில்வே வாரியம் ஏற்றுள்ளது. இதனால் ஊழியர்கள் அச்சமின்றி பணியாற்ற முடியும்”என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT