Last Updated : 13 Jun, 2020 05:39 PM

 

Published : 13 Jun 2020 05:39 PM
Last Updated : 13 Jun 2020 05:39 PM

ஊழியர்கள் 6 பேருக்கு கரோனா: நெல்லையில் நகைக் கடைக்கு சீல்

திருநெல்வேலி

திருநெல்வேலியில் நகைக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து அந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் 10 பேர், புறநகர் பகுதிகளில் 11 பேர் என்று மொத்தம் 21 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 446 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக மாவட்டத்தில் நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி டவுனிலுள்ள பிரபல நகை கடையில் ஊழியர் ஒருவருக்கு இன்று முன்தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கடையில் பணிபுரிந்த 32 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நகை கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த நகைகடையில் முறையான பாதுகாப்பு அம்சங்கள் அந்த கடையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சிப்பந்திகளுக்கு அன்றாடம் செய்யப்படும் முறையான பரிசோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் மாநகராட்சி நிர்வாகம் குற்றம் சாட்டி உள்ளது. மேலும் கடை முழுவதும் கிருமிநாசினி கொண்டு தொற்று நீக்கம் செய்யப்படவில்லை எனவும் சிப்பந்திகள் தங்கும் அறை முறையாக தொற்று நீக்கம் செய்யப்படவில்லை எனக் காரணம் காட்டி மாநகராட்சி நிர்வாகம் வருகிற 15-ஆம் தேதி வரை கடையை மூட உத்தரவிட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பையும் தனியார் நகைக்கடை முன்பு மாநாகராட்சி அதிகாரிகள் ஒட்டினர் . மேலும் தனியார் நகைக்கடை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x