Published : 13 Jun 2020 06:32 AM
Last Updated : 13 Jun 2020 06:32 AM
திருச்சி/ தஞ்சாவூர்/ திருவாரூர்
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள மேட்டூர் அணையிலிருந்து தண் ணீர் திறக்கப்பட்டுள்ளதை விவ சாயிகள் வரவேற்றுள்ளனர். கல்ல ணையில் இருந்து ஜூன் 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
டெல்டா மாவட்ட குறுவை சாகு படிக்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் பழனி சாமி நேற்று தண்ணீரைத் திறந்து வைத்தார். இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் கூறியபோது, “8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12-ம் தேதியே குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். குறுவை சாகுபடி மேற்கொள்ள வுள்ள விவசாயிகளுக்கு உரிய உதவிகளை தமிழக அரசு விரைந்து செய்ய வேண்டும்” என்றார்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநி லத் தலைவர் பூ.விசுவநாதன் கூறியபோது, “வழக்கமாக குறுவை சாகுபடிக்கு தமிழக அரசு வழங்குவதைப் போல நிக ழாண்டும் சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்து விவ சாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும். சாகுபடி முழுமைக் கும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கர்நாடகா நமக்கு வழங்க வேண்டிய நீரை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஜூன் 16-ல் கல்லணை திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் கீழ் காவிரி வடிகால் வட்ட பொதுப் பணித் துறை கண்காணிப்பாளர் எஸ்.அன்பரசன், கல்லணையில் புதுப்பிக்கப்பட்ட பகுதிகள், ஷட்டர்கள், ரெகுலேட்டர்கள் ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் பணியாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். காவிரியில் வரும் புதுவெள்ளத்தை வரவேற்கும் விதமாக கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் பாலங்கள், கரிகால் சோழன், ராஜராஜ சோழன், அகத்தியர் மற்றும் உழவன் சிலை ஆகியவை வண்ணம் பூசப்பட்டு பளபளப்பாக காட்சியளிக்கின்றன.
இதற்கிடையே, ஒரத்தநாடு பகுதியில் தூர்வாரும் பணியை நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், ‘‘கல்லணையில் இருந்து வரும் 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. விரைவில் தூர்வாரும் பணிகள் 100 சதவீதம் முடிக்கப்படும்’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
‘குறுவை, சம்பா சாகுபடி அதிகரிக்கும்’
திருவாரூர் மாவட்டம் அதம்பார் கிராமத்தில் திருமலைராஜன் ஆற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை நேற்று ஆய்வு செய்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதியே திறக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கடைமடை வரை தடையின்றி செல்லும் வகையில் ஆறு மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
தமிழக அரசின் சிறந்த நீர் மேலாண்மை மற்றும் விவசாய உதவி திட்டங்களால் கடந்த ஆண்டு 24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது வரலாற்றிலேயே இல்லாத கொள்முதல் அளவாகும். இந்த ஆண்டும் குறுவை, சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரித்து மகசூலும் அதிகரிக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment