Published : 12 Jun 2020 07:40 AM
Last Updated : 12 Jun 2020 07:40 AM
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள ரூ.1,624.78 கோடி பணப்பலன்கள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் 6,221 தொழிலாளர்கள் காத்திருக் கின்றனர்.
போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி 2019 ஏப்ரல் முதல் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் பணிக்காலத்தில் இறந்த தொழிலாளர்கள் என 6,221 பேருக்குரிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை கடந்த ஒரு ஆண்டாக வழங்கப்ப டவில்லை. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை, சேலம், விழுப்புரம், கும்ப கோணம், நெல்லை, கோவை கோட்டங்களில் வருங்கால வைப்பு நிதி ரூ. 447.70 கோடி, பணிக்கொடை ரூ. 491.23 கோடி, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ரூ.401.79 கோடி, விடுப்பு ஊதியம் ரூ.284.06 கோடி என மொத்தம் ரூ.1,624.78 கோடி பாக்கி வைக் கப்பட்டுள்ளது.
இந்த பணப் பலன்களை தொழிலாளர்களுக்கு உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தொமுச பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.சண்முகம், தமிழக போக்குவரத்துத் துறை முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து தொமுச பொருளாளர் நடராஜன் கூறு கையில், கரோனா ஊரடங் கால் ஓய்வூதியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு சேர வேண்டிய அனைத்து ஓய்வூதியப் பணப் பலன்களையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றார்.
போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ். சம்பத் கூறுகையில், வருங்கால வைப்பு நிதி சட்டம் மற்றும் பணிக்கொடை பட்டுவாடா சட்டத்தின் கீழ் பணி ஓய்வு, தன் விருப்ப ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் பணி முடிவடையும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்றதிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் பணி நிறைவு பலன்களை வழங்க வேண்டும். 2019 ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரையிலான நிலுவைகளை தீர்வு செய்ய அரசும், போக்குவரத்துக் கழக நிர்வாகங்களும் முன்வர வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT