Published : 11 Jun 2020 06:54 AM
Last Updated : 11 Jun 2020 06:54 AM

1,239 மருத்துவர்கள் உட்பட 2,834 மருத்துவ பணியாளர்கள் நியமனம்- முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை

கரோனா சிகிச்சை பணிக்காக 1,239மருத்துவர்கள் உட்பட 2,834 மருத்துவப் பணியாளர்களை 3 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்புக்காக மேற்கொண்டு வரும் பல்வேறு சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறை மூலம் ஏற்கெனவே 530 மருத்துவர்கள், 4,893செவிலியர்கள், 1,508 ஆய்வக நுட்புநர்கள், 2,715 சுகாதார ஆய்வாளர்களை நியமித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துவப் படிப்பை முடித்த,அரசு பணியில் அல்லாத 574 முதுநிலை மருத்துவ மாணவர்களை மாதம் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற கூடுதலாக நியமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாத ஊதியம் ரூ.60 ஆயிரத்தில் 665 மருத்துவர்கள், மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் 365 ஆய்வக நுட்புநர்கள், மாத ஊதியம் ரூ.12 ஆயிரத்தில் 1,230 பல்நோக்கு சுகாதாரபணியாளர்களையும் நியமனம்செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் 3 மாதங்களுக்குஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுகின்றனர்.

முதல்வரின் உத்தரவையடுத்து, சுகாதாரத் துறை மூலம் இவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டு, பணியில் இணைந்து வருகின்றனர்.

இதன்மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்தபணியாளர்களின் வேலைப்பளு குறைவதுடன், கரோனா சிகிச்சையையும் மேம்படுத்துவதாக அமையும். இந்த அசாதாரண சூழலில்களப்பணியாளர்களாக பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு தமிழக அரசு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x