Published : 10 Jun 2020 09:52 PM
Last Updated : 10 Jun 2020 09:52 PM
ஊரடங்கு அமலில் உள்ளதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேன் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். குமரியில் தேனீ ஆராய்ச்சி மையம் அமைத்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்இந்தியாவில் அதிக தேன் உற்பத்தி செய்யும் மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. இங்கு மார்த்தாண்டம், மற்றும் மலைசார்ந்த சுற்றுவட்டார பகுதிகளில் ரப்பர், மற்றும் பிற தோட்டங்களில தேன் உற்பத்தி அதிக அளவில நடைபெறுகிறது.
ஆண்டிற்கு 15 லட்சம் கிலோ இயற்கை தேன் குமரியில் உற்பத்தி செய்யப்படுகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேன் விவசாயிகள் தேன் கூடுகளை அமைத்து குடிசை தொழிலாக தேன் உற்பத்தியை செய்து வருகின்றனர். இதை நம்பி நேரடியாகவும, மறைமுகமாகவும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெற்று வருகின்றனர்.
ஆனால் தற்போது ஊரடங்கால் தேன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேன் விவசாயிகள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து மார்த்தாண்டத்தை சேர்ந்த தேன் விவசாயிகள் கூறுகையில்;
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேன் விவசாயிகள் குமரி மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் சென்று தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மழை இன்றி இருப்பதால் தேன் உற்பத்தி காலமாக கருதப்படுகிறது.
இந்த நாட்களில் பிற மாநில்ஙகளில் உள்ள தோட்டங்களில் தேன் கூடுகளை வைத்து விட்டு ஜீன், ஜீலை மாதங்களில் தேன் எடுக்கும் பணியில ஈடுபடுவோம். தற்போது ஊரடங்கால தேன் கூடுகளை பிற மாநிலங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரமுடியாத சூழல்
உள்ளது.
இதனால் தேன் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்து வறுமையில் வாடி வருகின்றனர. எனவே தேன் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும். அத்துடன் இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் குமரி மாவட்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையத்தை தாமதமின்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT