Published : 10 Jun 2020 09:36 PM
Last Updated : 10 Jun 2020 09:36 PM
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மணிமுத்தாறை 18 கி.மீ.-க்கு சீரமைக்கும் பணியை கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உப்பாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, நாட்டாறு, தேனாறு, பாலாறு, நாட்டாறுகால், விருசுழியாறு, பாம்பாறு உட்பட 9 சிற்றாறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகள் மூலம் 572 கண்மாய்கள் பயன் பெறுகின்றன.
தற்போது சிற்றாறுகளை சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்தும், வழித்தடம் மறைந்தும் காணப்படுகின்றன.
இதையடுத்து ஆறுகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். தற்போது மணிமுத்தாற்றை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த ஆறு சிவகங்கை அருகே ஏரியூர் கண்மாயில் தொடங்கி கண்ணங்குடி வழியாக செல்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் 58 கி.மீ., பாயும் இந்த ஆற்றை முதற்கட்டமாக தேவகோட்டையில் இருந்து கண்ணங்குடி வரை 18 கி.மீ.,-க்கு சீரமைக்கப்படுகிறது.
சீரமைக்கும் பணியை இன்று அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், முன்னாள் எம்பி செந்தில்நாதன், கோட்டாட்சியர் சுரேந்திரன், ஆவின் தலைவர் அசோகன், மணிமுத்தாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் குமார், வட்டாட்சியா் மோசியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT