Last Updated : 10 Jun, 2020 04:17 PM

 

Published : 10 Jun 2020 04:17 PM
Last Updated : 10 Jun 2020 04:17 PM

அரசு அலுவலர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு 'இந்து தமிழ் திசை' சார்பில் முகக்கவசம்: அமைச்சர் வேலுமணியிடம் வழங்கல்

'இந்து தமிழ் திசை' சார்பில் களப் பணியாற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கும் வகையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம், 'ஃபேஸ் ஷீல்டுகளை வழங்கிய 'இந்து தமிழ் திசை' பொது மேலாளர் டி.ராஜ்குமார். அருகில் ஆட்சியர் கு.ராசாமணி. மாநகராட்சி ஆணையர் ஸ்ரவண்குமார் ஜடாவத் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்.

கோவை

'இந்து தமிழ் திசை' சார்பில் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான முகக் கவசங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கப்பட்டன.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுதல் அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக் கவசம் அணிதல், சமூக விலகல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

முழு நேரமும் களத்தில் இருந்து பணிபுரியும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளும் வகையில், 'இந்து தமிழ் திசை' சார்பில் 'ஃபேஸ் ஷீல்டு' (Face shield) எனப்படும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான ஃபேஸ் ஷீல்டுகளை 'இந்து தமிழ் திசை' பொது மேலாளர் டி.ராஜ்குமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஸ்ரவண்குமார் ஜடாவத், மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண், 'இந்து தமிழ் திசை' மூத்த உதவி மேலாளர் ப. விஜயகுமார், கோவை மண்டல விளம்பரப் பிரிவு வே. செந்தில்குமார், உதவி மேலாளர் ஆர். சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை ஆர்எஸ்.புரம் பகுதியில் தயாரிக்கப்பட்டு வரும் ஃபேஸ் ஷீல்டுகள் அணிவதற்கும், கையாளுவதற்கும் எளிதானவை. மற்ற முகக் கவசங்களை நீண்ட நேரம் அணிந்து பணிபுரியும் போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும், மற்றவர்களுடன் உரையாடுவதற்குத் தடை ஏற்படும். இதேபோல் வியர்வையும் ஏற்பட்டு, தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதற்கு மாற்றாக ஃபேஸ் ஷீல்டுகள் பயன்படுத்த ஏற்றவை. கோவையில் களப் பணியாளர்களுக்கு 1000 ஃபேஸ் ஷீல்டுகள் இந்து தமிழ் திசை சார்பில் வழங்கப்பட உள்ளது.
..........................

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x