Published : 09 Sep 2015 02:34 PM
Last Updated : 09 Sep 2015 02:34 PM
கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் வெள்ள அபாயம் இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் பெய்துவரும் தொடர் மழையால் ஓசூர் கெளவராப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1640 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
அணையின் மொத்த கொள்ளளவான 44.2-ல் தற்பொழுது 42.7 ஐ எட்டியது இதனால் அணைக்கு வரும் மொத்த நீரும் தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்ற படுகிறது.
இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு வினாடிக்கு 1499 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதில் 525 கன அடி நீர் வெளியேற்றபடுகிறது அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்பொழுது 50.2 அடியை எட்டியுள்ளது.
இதனால் கரையோரம் இருக்கும் மக்களுக்கு ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT