Published : 08 Jun 2020 07:12 PM
Last Updated : 08 Jun 2020 07:12 PM
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவிக்குத் தேர்வு செய்யத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அளிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அரசின் செய்திக் குறிப்பு:
“குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)ன்படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30 (Social Welfare and Nutritious Meal Programme Department) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (pass–port size) 08.07.2020அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
செயலர்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,
நெ.183/1, ஈ.வே.ரா.பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
கீழ்பாக்கம், சென்னை -10.
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT